ஒரு மணிநேரம் அவளருகில் நான்

புதிய ஆண்டும் மலர்ந்துவிட்டது. நினைவுகளாக, வரலாறுகளாக மட்டும் கடந்த ஆண்டு இன்றளவில் எம்மத்தியில் முகங்காட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டில் நிறம் ஊடாக பல விடயங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. காலத்தின் நகர்வுதான் வேகமாக இடம் பெறுகிறதோ என்ற கேள்வி எனக்குள் சில வேளை எழுவதுண்டு.

காலம் செல்லும் வேகம் என்பதை நிச்சயமாகக் கணிப்பிட்டுச் சொல்ல முடியாத நிலையோ என்று எண்ணத் தோன்றுகிறது. காலம் என்று கதைக்கும் போது, அல்பர்ட் ஐன்ஸ்டைன் என் நினைவுகளுக்குள் நிழலாடுகிறார். காலத்தை கணித்து கவிதை செய்ய கணிதவியலாளர்களுள் குறிப்பிட்டத்தக்கவர் அல்பர்ட் ஐன்ஸ்டைன். அவரின் பிரபல்யமான கூற்றொன்று உள்ளது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அதுதான்,

When a man sits with a pretty girl for an hour, it seems like a minute. But let him sit on a hot stove for a minute and it’s longer than any hour. That’s relativity.

தொடர்பியலின் தத்துவத்தை நேரம் சார்பாக மிக எளிமையாகச் சொன்ன அவரின் கூற்று அற்புதமானது. நேரத்தின் வேகம் என்பது நேரம் சார்பாக ஒரு தனிநபர் கொண்டுள்ள முக்கியத்துவத்தைப் பொறுத்து வேறுபடும். (என்ன இது! நேரம் நேரம் என்று உதய தாரகை கதைக்கிறீங்க.. என்ன விசயம்..?)

couple

கடந்து சென்ற 2008, சில பேருக்கு வேகமாகவும், இன்னும் சிலருக்கோ மெதுவாகவும் கழிந்ததாக உணர்வு ஏற்பட்டிருக்கலாம். எது எப்படியோ, நான் இன்று உங்களுடன் சுவாரஸ்யமான ஒரு விடயம் பற்றிக் கதைக்கப் போகின்றேன். நட்பு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நீங்கள் அறிந்து கொண்டுள்ள நட்பு எவ்வாறானதென எனக்கு நிஜமாகத் தெரியாது. ஆனால், நான் புரிந்து கொண்ட நட்பின் வடிவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எனது சிறு முயற்சி இது.. (அட.. அதிசயமாய் இருக்கே.. ஒரு நாளும் உதய தாரகை இப்படி என்ன விசயத்தைச் சொல்லப் போகிறேன் என்று சொல்லமாட்டேரே!!.. என்ன விசயம் உதய தாரகை!???)

புதிய ஆண்டில் புதிய திட்டங்களை இட்டு அதனை நடமுறை செய்து வெற்றி பெற வேண்டுமென்றே எல்லோரும் விரும்புவர். அதேபோல், நானும் விருப்பங்களோடுதான் புதிய ஆண்டை பத்து வருடங்களுக்கு முன் ஆரம்பிப்பேன். ஆனால், பின்னரெல்லாம் எப்போதும் “உண்மையான உதய தாரகை” என இருக்க வேண்டுமென நினைத்துக் கொள்வேன். அதற்கு முயற்சி செய்வேன். நான் நானாக இருக்க வேண்டுமென்பதே எனது எண்ணமெல்லாம்.

எனது நண்பியொருத்தி, நான் எப்படியிருக்க வேண்டுமென விரும்பினேனோ அதேயே அவளும் விரும்புவதாய் மெல்லிய நடையில் தெளிவான வைரவரிகளை அண்மையில் அவள் வலைப்பதிவில் எழுதியிருந்தாள். அவளின் அனுமதியுடன் அந்த வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் விரும்புவதும் நான் முயற்சிப்பதும் உண்மையான நான். உண்மையான உதய தாரகை! .

Friend and lover, optimistic yet balanced, witty yet sympathetic, courageous yet careful, strong yet sensitive, at peace with a failure yet with a spark to get better. True me, who loves more than hates, who has more friends than enemies, who gives more than takes, who inspires more than de-motivates, who accepts more than rejects, who sees the light more than darkness. That is what I am and that is what I need to carry on being.

இதுதான் நான்.. எளிமையான உதய தாரகை. நாம் உணர்வுகளின் கடுமையான பிடிக்குள் அகப்படும் நிலை நட்பின் பரவசத்தில் தான் வருகின்றதோ என நான் நினைக்கிறேன். இந்த நேரத்தில் இந்த வரிகளை எனக்கே சமைத்த என் நண்பிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். (உதய தாரகை.. இதெல்லாம் ரொம்ப ஓவர்…)

வலிகள் இருக்கும் போதுதான் வாழ்க்கை உயிர்ப்பானது என நம்மால் உணர முடியும். உயிர்ப்பான வாழ்க்கையில் நட்பு என்கின்ற அடைவு விசாலமானது. எதிர்காலத்தை எதிர்வு கூறுவது. நட்பு என்பது வாழ்க்கைப் பாடத்தின் முதல் வரி… (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குமே!!)

நட்புப் பற்றிச் சொல்லுகையில் எனக்கு ஒரு பாடலொன்று ஞாபகத்திற்கு வருகிறது. அப்பாடலின் வரிகள் மிக மிக அற்புதமானவை. உயிர்ப்பானவை. ஒரு காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் சக்கை போடு போட்ட Spice Girls என்ற ஆங்கில பாப் இசைக் குழுவினரைப் பற்றியும் அவர்களின் பாடல்கள் பற்றியும் நீங்கள் கட்டாயம் அறிந்து வைத்திருப்பீர்கள். குறைந்தது கேள்விப்பட்டாவது இருப்பீர்கள். அவர்களின் பாடல்களில் Headlines (Friendship never ends) என்ற பாடலில் வரும் வரிகள் நட்பின் வலிமை பொருந்திய உணர்வை மிக மென்மையாக சொல்லிச் செல்லும்.

Let’s make the headlines, loud and true
(Say you love me and I’ll say I love you too)
I wanna tell the world I’m giving it all to you
(Just remember what simple words can do)
Let’s make the headlines, loud and clear
(All that I have I give to you my friend)
The best things suddenly happen when you are here

(Just remember friendship never ends)
And if I lost my way you’d carry me home
Take me all the way to heaven, never leave me alone (everything)
And it’s just like everything matters when you are near (matters when you’re near)

இந்த வரிகள் சொல்லும் கவிதையை விட, அதில் பொதிந்துள்ள உணர்வுகளின் தொகுப்பு உன்னதமானது. நேற்று அந்தப் பாடலை அதன் மெல்லிய இசையுடனும், அழகிய ஐந்து குரலிலும் கேட்ட போது, எனது நட்பு வட்டாரங்கள் என் மனதில் கொட்டாரம் அடிக்கக் கண்டேன். இந்த உணர்வின் தொடர்பை பதிவாக்க நினைத்தேன், இதுவே அதுவாயிற்று.. உலகில் மிகப்பெரும் ஏழை, நண்பன் இல்லாதவன். (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குமே…!!!) உந்தன் பிரசன்னத்திலேயே எனக்கு பல நன்மைகள் விளைந்திடுமே என்கின்ற உணர்ச்சிபூர்வமான வரிகள், நண்பர்களின் அவசியத்தை ஆழமாகச் சொல்லும் அர்த்தமுள்ள சொற்கள் தானே.. !!

ஐன்ஸ்டைனின் கூற்றைத் தலைப்பாக்க நினைத்தேன். ஒரு மணிநேரம் அவளருகில் நான் என்று பெயர் உருவானது. நீங்க நினைத்த மாதிரி ஒரு விசயமும் இல்லை என்று நான் அடைப்புக்குறி Comment அடிக்க மாட்டேன்.. [நீங்க அப்படி நினைப்பீங்களா…?? (அது தானே… அது புரிஞ்சா சரிதான்..)]

நட்பு பற்றிய உங்கள் உணர்வுப் பகிர்வையும் மறுமொழியாக காண விரும்புகிறேன்.

– உதய தாரகை

2 thoughts on “ஒரு மணிநேரம் அவளருகில் நான்

 1. எனது புரிதலின் அடிப்படையில், எம் சிந்தனைகள் ஒத்துப்போகும் உறவொன்றின் நட்பு எம்மீது ஏற்படுத்தும் உணர்வுகள் பற்றி அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

  நானும் எனது கொள்கைகள், சிந்தனைகள், ஆசைகள் எல்லாமே இம்மியும் பிசகாமல் ஒத்துப் போகும் ஒருவனுடன் உறவு கொண்டிருக்கிறேன்.

  அவனுடன் பேசிக் கொண்டிருக்கிற போது என் எல்லைகள் பிரபஞ்சம் தாண்டியும் விசாலித்துச் செல்வதுண்டு. அடித்து அடித்து ஓடி வரும் அலைகள் போல நான் அவனுடன், அங்கே பூமியில் உலாவும் நரர்கள் பற்றியும், இயற்கை பற்றியும் பேசிக் கொண்டேயிருக்க, உறக்கமும், பசியும் இல்லாத உலகொன்றை நான் நாடியதுண்டு. முடியாத போது படைத்தவனை பிழை கூறி சபித்து விடுவதுண்டு.

  “காதலியின் கால்கொழுசுக்காக உன் தொழுகைப்பாயை விற்று விடு” என்ற மதங்களின் வேலியுடைத்துச் செல்லும் அவன் கிறுக்கி கிழித்தெரிந்து விட்ட கவிதைகளை நான் பித்துப்பிடித்து ரசிப்பதுண்டு. அவன் கடவுளாயும் நான் பக்தனாயும் நான் கடவுளாயும் அவன் பக்தனாயும் மாறிமாறி இருந்ததுண்டு. எவறுமே ஏறாத உயரம், மூழ்காத ஆழம் நான் ஏறியும் மூழ்கியும் எழுந்ததுண்டு. இனம் புரியாத முக்தி நிலையடைந்து நானும் பலதடவைகள் தன்னிலை மறந்தும், தாய்மொழி மறந்தும் அவனுடன் உறையாடிக் கொண்டு எனது விசாலித்த பிரபஞ்சத்தில் நிர்வாணமாய்க் கிடந்ததுண்டு.

 2. ரம்ஸி மிக உணரும் படியாக வார்த்தைகளால் உணர்வுகளை செதுக்கி இருக்கிறீர்கள்.. அவர் யாரென்று அறிந்து கொள்ளலாமா..?? முடிந்தால் நிறத்தில் அவர் பற்றி ஒரு பதிவையும் போட நான் ரெடி… நீங்க ரெடியா,…??

  உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள் பல…

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s