கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்கள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 59 செக்கன்களும் தேவைப்படும்.)

ஏப்ரல் முதலாம் திகதி, முட்டாள்கள் தினமாக யாரும் அறிவர். கூகிள் தனது பங்கிற்கு முட்டாள் தினத்தில் பல சுவாரஸ்யமான விடயங்களை தன் பங்கிற்கு செய்து மக்களின் கவனத்தை உலகளவில் ஈர்த்துக் கொள்ள 2000 ஆம் ஆண்டிலிருந்து மறப்பதேயில்லை. இன்று ஏப்ரல் முதலாம் திகதி, கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

ஒவ்வொரு வருடமும் முட்டாள் தின பல நகைச்சுவைகளை உருவாக்குவதில் கூகிளுக்கு நிகர் கூகிள் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, இந்த நகைச்சுவைகளை உருவாக்குவதில் வெறுமனே Google.com இணையத்தளம் பங்கு கொள்ளாது, பிராந்தியங்களுக்குப் பொறுப்பான Google.co.uk, Google.com.au போன்ற பல நாடுகளுக்குப் பொறுப்பான தளங்களும் தன் பங்கிற்கு மிகச் சுவாரஸ்யமான விடயங்களை வழங்க தயாராகியிருக்கும்.

இதோ விரிகிறது இந்த ஆண்டின் கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்கள்

உயிர் எழுத்துக்களுக்குப் பஞ்சமான ஜிமெயில் தளம்.

இன்றைய ஜிமெயில் தளத்தில் காணப்பட்ட சொற்களில் ஆங்கில உயிர் எழுத்துக்கள் எதுவும் காணப்படவில்லை.

விலங்கின் மொழியை மொழிபெயர்க்கும் கையடக்கத் தொலைபேசி செய்நிரல்.

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் நோக்குடன் கூகிள் விலங்குகளின் மொழிகளை மொழிபெயர்த்து மனிதர்களுக்குச் சொல்லக்கூடிய கையடக்கத் தொலைபேசி செய்நிரலொன்றை தயாரித்துள்ளது.

அந்தச் செய்நிரல் எப்படி இயங்குகின்றதென்பதைச் சொல்லுகின்ற வகையில் காணொளியொன்றையும் கூகிள் அந்தத் தளத்தில் இணைத்திருந்தது.

புத்தகங்களை முப்பரிமாணத்தில் வாசிக்கலாம்

Google Books தமது இணையத்தளத்தில் காணப்படும் புத்தகங்களை முப்பரிமாண முறையில் (3D) வாசிக்கக் கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

முப்பரிமாண முறையில் பாதையில் பயணம் செய்யலாம்

Google Street View என்பது பலராலும் விரும்பப்படுகின்ற ஒரு சேவையாகும். ஒரு இடத்தில் அமைவைத் துள்ளியமாகக் காட்டக்கூடிய தகவை இந்தத்தளம் கொண்டுள்ளது. இன்று அந்தத் தளத்தில் காணப்படும் படங்களை முப்பரிமாண முறையில் பார்க்கக் கூடிய வாய்ப்பை கூகிள் ஏற்படுத்தித் தந்திருந்தது.

YouTube செலவீனங்களைக் குறைக்க உதவுங்கள்

இன்றைய தினம் காணொளி பகிர்வுத் தளமான YouTube இன் இலட்சணையை (Logo) கூகிள் மாற்றம் செய்திருந்தது.

இதற்கான காரணத்தையும் அது தெளிவுற அதன் வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தது. வீடியோக்களை textP என்ற நிலையில் பார்க்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த text-only mode இன் மூலம் காணொளிகளை காண்பதால், செக்கனுக்கு ஒரு டொலரை YouTube சேமித்துக் கொள்ள உதவுவதாக கூகிள் கூறுகின்றது.

எல்லாவற்றையும் சேமிக்கும் Google Docs சேமிப்பகம்

ஆம். எல்லாவற்றையும் உங்கள் திறப்பு, வீட்டிலுள்ள பொருட்களைக் கூட சேமித்து வைக்கக்கூடிய கூகிள் டொக்ஸ் கட்டமைப்பு கூகிள் இன்று அறிமுகம் செய்து வைத்தது.

தேடலிற்கான நேரம் செக்கனில் இல்லை

கூகிளில் ஒரு தேடலை மேற்கொள்ளும் போது, தேடலிற்காக எடுத்துக் கொண்ட நேரத்தை வழமையாக செக்கனிலேயே தெரிவிக்கும். இன்று அவ்வாறில்லை. பல அளவீடுகளை இதனைத் தெரிவிக்கும் பொருட்டு பயன்படுத்திக் கொண்டது.

கூகிள் தனது தளத்தில் பயன்படுத்திய சில அளவீடுகள் பின்வருமாறு.

1.21 gigawatts
11.90 parsecs
0.30 centibeats
0.32 centons
0.33e+43 Planck times
0.97 times the velocity of an unladen swallow
0.17 microfortnights
at warp 8.96
0.07 nanocenturies
0.03 femtogalactic years
72.10 jiffies
0.41 microweeks
23.00 skidoo
1.56e-15 epochs
2.00 shakes of a lamb’s tail
3.49 hertz

இவ்வாறாக பல சுவாரஸ்யங்களை கூகிள், இன்றைய தினத்தில் அரங்கேற்றியது. கூகிளின் இன்னும் பல சுவாரஸ்யங்களின் இணைப்புகளை கீழே பகிர்ந்து கொள்கிறேன். சென்று தான் பாருங்களேன்.

இன்னும் பல சுவாரஸ்யங்களை கண்டு கொள்ள எனது டிவிட்டர் Profile ஐ பாருங்கள். சுவாரஸ்யங்கள் மலிந்து கிடக்கும்.

இந்தப் பதிவு உங்களிற்கு இன்றைய நாளின் இணையத்தின் சுவாரஸ்யமான பொழுதுகளை ஒருமிக்க கொண்டு வந்து தந்திருக்கும் என நம்புகிறேன்.

எப்போதும் இல்லாவிட்டாலும் அடிக்கடியாவது சிரிக்க வேண்டுமென கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

6 thoughts on “கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்கள்

 1. வாங்க துபாய் ராஜா.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 2. வாங்க Minnix… தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். கூகிளின் அத்தனை சேவைகளும் முட்டாள் தினத்திற்கான தங்கள் தயாரிப்புகளை வெளியிட்டன.

  Google AdSense ஆனது, இனி விளம்பரங்களை இணையத்தளங்களில் காட்சிப்படுத்துவதற்காக Wingdings என்ற யாவரும் அறிந்த குறியீட்டு Font ஐ பயன்படுத்தப் போவதாக வேறு முட்டாள் தினத்திற்காகச் சொல்லியிருந்தது. http://goo.gl/tP52

  இவ்வாறாக கூகிளின் முட்டாள் தின சுவாரஸ்யங்கள் விரிந்து செல்கின்றன.

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 3. ஹாய், உதயதாரகை

  உண்மையில் நான் இந்த முட்டாள் தினத்தை மறந்துவிட்டேன். எனக்கு வழமையாக பகல் 12 மணிக்குப்பிறகு தான் ஞாபகத்திற்கு வரும், அதே போல் எனது ஓப்பிஸ் நண்பன் ஏதோ ஒரு விடயத்திற்காக ஏப்ரல் பூல் என்றான்… நான் அதற்கு அட ஒரு பட்டா பழயததையுமா ஞாபத்தில் வைத்ததிருக்க என்று சொல்லி சிரித்தேன்…

  ஆனால் உங்களின் இந்த இடுகை மூலம் தான் தெரிகிறது… GOOGLE, APRIL FOOLஐ IT, MODERN TECHNOLOGY உடன் இணைத்துக் கொண்டாடுகிறது… என்று.

  நான் சிறு வயதாக இருக்கும் போது என்னை ஒரு வயது முதிர்ந்த ஒருவர் இத்தினத்தில் ” டேய் நீ யானையைக் காணவில்லையாடா? டக்கென்று ரோட்டுக்குப் போய் பாரு என்றார்” நானும் பார்த்தேன், ஏமார்ந்தேன்.

  இற்றைவரை இது போல் யானை வருது, ஒருவர் இறந்து விட்டார்.. என்று தான் மற்றவரை ஏமாற்றி முட்டாளாக்கலாம் என்று நினைத்தேன்.

  GOOGLEஐ போன்ற பொய்கள் ஒரு நாள் மெய்யாக வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது…

  நீங்கள் என்ன சொல்கிறீங்க…?

  உங்களின் இவ்விடுகை என்னை ஒரு புதிய கோணலில் பார்க்க ‌வைத்ததிற்கு நன்றிகள்…

 4. வாங்க பௌஸர்.. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள். முட்டாள் தினத்திற்காக புதிய விடயங்களை அறிமுகப்படுத்தவும் Google இல் செயற்றிட்டங்கள் செய்கிறார்கள் என்பது மட்டும் உண்மைதான். ஏனெனில், இந்த நிலைகளை தெரிவிக்க ஒவ்வொரு விடயத்திற்கும் செய்திருக்கும் இணையத்தளங்கள் அழகும் போதிய தகவல்களையும் கொண்டுள்ளதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

  Google Reader இல் பல இணையத்தளங்களின் RSS Feed ஐ சேர்த்து வாசிக்க முடியும். எவ்வளவு கூடுதலாக வாசிக்கிறீர்களோ அவ்வளவுக்கு உங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, அந்தப் புள்ளிகளைக் கொண்டு உங்களுக்கு தேவையான சில பொருள்களை வாங்கமுடியும் என்று வேறு நேற்று முட்டாள் தினத்திற்காக அறிவிப்பு விடுத்திருந்தது கூகிள். http://goo.gl/lZm5

  முட்டாள் தினத்திற்கான ஏற்பாடுகள் பலதும் நவீன தொழில்நுட்பங்களைத் தாண்டி பழைய முறைகளை தேர்ந்தெடுத்தல் போன்ற விடங்களாகவே இருக்கும். அதேபோல், கொஞ்சம் கூட சாத்தியமாக முடியாத விடயமாகவே இருக்கும்.

  ஆனாலும், சிலவேளைகளில், இந்த விடயங்களில் சிலது புதிய சேவைகளையும் தொழில்நுட்பங்களையும் பயனர்களுக்கு வழங்குவதற்கான யோசனைகளை (Ideas) வழங்க முடியும். எப்படியோ, கூகிளுக்கு நிகர் கூகிள் தான்.

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s