எங்கே தப்பியோடுவது?

(இந்தப் பதிவை வாசிக்க 1 நிமிடம் தேவைப்படும்.)

சிலவேளைகளில், நான் சொல்ல நினைப்பதை அப்படியே வார்த்தைகளில் கொண்டுவர முடிவதில்லை. அப்படியே கொண்டு வந்த போதிலும், அதன்பால் கொண்டுள்ள அந்த உணர்வுகளை அது உசுப்பிவிடுவதுமில்லை. எண்ணங்களில் தோன்றும் அதிசயமான உணர்வுப் பிரவாகங்கள்தான் உலகத்தின் இருத்தலின் ஆதாரம் என்று கூட நான் நினைப்பதுண்டு.

சிலவேளைகளில், இன்னொருவரின் பாடல், முற்றிலும் அந்நியமானவரின் பேச்சு அல்லது காட்சிகளை கோர்த்துக் காட்டும் நிழற்படம் என்பன நான் சொல்ல நினைக்கும் அந்த விடயத்தை அப்படியே சொல்லிப் போவதுண்டு. அந்தக் கணம் தோன்றும் நிலையில், என் வாழ்தலின் ஆதாரங்கள் பற்றிய கனவுகளை ஆராய்ந்து பார்ப்பேன்.

எழுதுவது என்பது நம்பிக்கைக்கான ஆதாரம். அது கண்களையும், இதயத்தையும் விரியத் திறந்து கொண்டு, ஒருவன் சுயமாய் நம்பிக்கை கொண்டுள்ள அனுமானங்களுக்கு சவால்விடுத்து, சிக்கல் நிறைந்த விடயத்திலிருந்து சிற்பம் செதுக்குவது போன்றது. எழுதுவதன் மூலம் நாம் முகந்தெரியாதவர்களாயிருந்த போதும், தனிப்பட்ட அடையாளங்களை வழங்கிவிடுகிறோம். எமது உள் மனமானது, நோக்கம், அழகு, கருத்து என்பன எதுவுமே இல்லை என தர்க்கம் செய்த போதும், அவை யாவும் இருப்பதாய் புரிந்து கொள்கிறோம்.

ஆகையால், எழுதுவதென்பது ஆர்வத்தைப் பற்றிக் கொண்டதான செயல். யாருமே பரிசோதித்திராத வாழ்க்கை பற்றிய கனவுகளை அறிந்துவிடாமலேயே, அதனை வாழ்வதை விட, எது இலகுவானதாய் இருந்துவிட முடியும்?

மேலுள்ள மேற்கோள், The writer’s idea book என்ற நூலின் ஆசிரியரான Jack Heffron எழுதுதல் பற்றிச் சொன்னது. இதுதான் நான் சொல்ல நினைத்தது. அதுவே, அவரால் அவ்வளவு அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. உலகின் ஆளுமைகளின் வரிகளைக் காணும் போது, பிறத்தலின் பலன் பற்றிய கனவுகள் பேசப்பட வேண்டுமென்று உணர்வேன்.

நாம் எல்லோரும் இப்படித்தான். சிலவேளைகளில் எமக்குள் தோன்றும் எண்ணங்களை அப்படியே சொல்லிவிட முடிவதில்லை. அப்படி முடிந்தாலும், நமக்கேயுரித்தான தணிக்கை பற்றிய மாயமான தடைகள், சொல்லவந்த விடயத்தை அப்படிச் சொல்லிவிடவும் இடம் கொடுப்பதில்லை. ஆனால், நாம் Already naked என்பது மட்டுந்தான் மிகப் பெரிய உண்மை.

எண்ணங்களிற்கு தப்பியோடத் தெரியாது என்பதை நாம் எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறோம்?

– உதய தாரகை

2 thoughts on “எங்கே தப்பியோடுவது?

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s