எண்ணம். வசந்தம். மாற்றம்.

ஒன்றுமில்லை

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 24 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

அங்கே வானத்தைப் பார்த்துக் கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருப்பவனை உங்களால் பார்க்க முடிகிறதா?

“என்ன நடந்தது?” என்று நீங்கள் கேட்டால் — “ஒன்றுமில்லை” என்பதுதான் உச்ச பதிலாகவிருக்கும்.

ஒன்றுமில்லை என்பதிலேயே எல்லாமே இருக்கிறது — அது தான் நிஜம்.

“எதை நான் பிழையாகச் செய்து விட்டேன்”.. “அதை அப்படிச் செய்திருக்கலாமே!”

“ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், அதை மாற்றி இப்படிச் செய்திருப்பேனே!!” — “திரும்பவும் அந்த நேரம் வந்து — எல்லாமே இப்படித்தான் நடந்து முடியுமோ! முடியுமா?”

“சரியாகச் செய்ததையுமா இவர்கள் பிழையென்கின்றனர்?”

ஓராயிரம் எண்ணவோட்டங்கள். தெரிந்த பாடலின் முதல் வரி கேட்டு தொடர் வரியைப் பாடுகின்ற வேகமாய், எண்ணங்கள் பரந்து விரிந்து பரவிக் கொண்டிருக்கின்றன.

கேட்டால் — “ஒன்றுமில்லை.”

“அவன் வானத்தை அவதானிப்பதை நீங்களுமா பார்க்கவில்லை?” என்று கேலியாக கோபாலு கேட்கிறான்.

– உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்