நிழலோடு ஒரு நிமிடம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 45 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

அண்மையில் நண்பனை சந்திப்பதற்காய் தொலைவிலிருக்கும் ஒரு நகரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. கோடை காலம், பிரசன்னமாகத் தொடங்கியிருப்பதால் காலையில் சூரியனின் வருகையில் கூட சுணக்கமும் அன்று இருக்கவில்லை.

போகும் வழியில் கோடைக்குக் குடை பிடித்தாற் போல், ஆங்காங்கே நிமிர்ந்து நின்ற கட்டிடங்கள் அதன் அளவைத் தாண்டியும் விசாலமாய் நிலத்தில் நிழலாகி நின்று உருவம் கொண்டிருந்தது.

இதைக் கண்ட எனக்கோ, நான் வாசித்த கலீல் ஜிப்ரானின் கதையொன்று எண்ணத்திற்குள் நிழலாடத் தொடங்கியது. “நரி” என்பது தான் அந்தக் கதையின் தலைப்பு. “கிறுக்கன்” (The Madman) என்ற கலீல் ஜிப்ரானின் நூலில் இடம்பெற்றிருந்தது.

விடியற் காலையில் எழுந்த நரி தன் நிழலைப் பார்த்து, “இன்று மதியச் சாப்பாட்டுக்கு ஒரு ஒட்டகத்தை நான் வேட்டை செய்ய வேண்டும்” என தனக்குள் எண்ணிக் கொண்டு, காலை முழுக்க ஒட்டகம் தேடுகின்ற படலத்தை தொடர்ந்தது. மதியமும் ஆனது, எதேச்சையாக தன் நிழலை மீண்டும் நரி மதியத்தில் கண்டு கொண்டது. “இன்றைக்கு ஒரு எலி சாப்பாட்டுக்குப் போதும்” என்று தனக்கே சொல்லிக் கொண்டது.

மூன்று வாக்கியத்தில் நிறைவாகின்ற இந்தக் கதை சொல்கின்ற வாழ்வியல் மாற்றத்தின் அடிப்படை — மிக வியப்பு.

ரால்ப் வால்டோ எமர்சன் சொன்ன ஒரு விடயத்தை கோபாலு சொல்லச் சொன்னான். “உங்களை நீங்களல்லாது இன்னொன்றாக மாற்றிவிட தொடர்ச்சியாக முயற்சிக்கும் இந்த உலகத்தில், நீங்களாகவே உங்களைத் தக்க வைத்திருப்பது மிகப்பெரிய சாதனை.”

– உதய தாரகை

மறுமொழி சொல்லி ட்விட்டரில் தொடர நான் இங்கே. 🙂 –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

Advertisements

5 thoughts on “நிழலோடு ஒரு நிமிடம்

  1. “உங்களை நீங்களல்லாது இன்னொன்றாக மாற்றிவிட தொடர்ச்சியாக முயற்சிக்கும் இந்த உலகத்தில், நீங்களாகவே உங்களைத் தக்க வைத்திருப்பது மிகப்பெரிய சாதனை.”

    அருமையான நெஞ்சில் எப்போதும்
    நிறுத்திவைத்துக் கொள்ளவேண்டிய சொற்றொடர்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

  2. அழகான வரிகள் வாழ்வின் யதார்த்தத்தை ஆழமாக பதிய வைக்கின்றன…..என் முகநூலினை அடிக்கடி அலங்கரிக்கும் தங்கள் பதிவுகள் என்றென்றும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்…

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s