எண்ணம். வசந்தம். மாற்றம்.

என்ன செய்யப் போகிறாய்?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

கடந்த வாரம் முழுக்க, பேருந்து பயணங்களின் போதும் தூக்கத்திற்கு முன்னதான நேரத்தின் போதும் வாசிப்புத் துணையாகவிருந்தது The Icarus Deception என்ற நூல் தான். இந்த நூலாசியர் என்னைக் கவர்ந்தவர். செத் கொடின் பற்றி நிறத்தில் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன்.

படைத்துக் கொண்டேயிருக்க வேண்டுமென பறைசாற்றுவதாய் அந்த நூலின் உள்ளடக்கங்கள் விரிந்து செல்லும். வாசிக்க வாசிக்க உத்வேகம் தொடர்ச்சியாகக் கூடிக் கொண்டேயிருக்கும்.

your-turn

வாசகனை நேரடியாக விழித்துப் பேசுவதாய் புத்தகத்தின் பல கட்டங்கள் இருந்தன. அவற்றுள் என்னைக் கவர்ந்த சில நிலைகளை நிறம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள ஆர்வங் கொண்டேன். அதுவே இப்பதிவாயிற்று.

நூலின் இடம்பெற்ற என்னைக் கவர்ந்த பலநிலைகளுள் ஒருசிலதை தமிழாக்கம் செய்துள்ளேன்.

உன் தெரிவின் நேரம்

“அவர்கள் நேரசூசிப்படி வேலை செய்ய வேண்டும். எல்லா அறிவுறுத்தல்களையும் கேட்டு நடக்க வேண்டும் என்றெல்லாம் உன்னிடம் சொல்லித் தந்துள்ளார்கள்.

பெருமைகளை விழுங்கி விட்டு, கனவுகளை நோக்கிப் பயணிக்காதே என்று உன்னிடம் அவர்கள் சொல்லித் தந்துள்ளார்கள்.

நீ அவர்கள் என்ன சொன்னாலும், அதனை அப்படியே செய்துவிடுவதால் உனக்கு செல்வயோகம் கிடைக்கும், பரிசுகள் நெருங்கி ஓடிவரும் என்றெல்லாம் உன்னிடம் சத்தியம் செய்திருக்கிறார்கள்.

கடன், காப்பிட வசதி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை உனக்கு விற்பனை செய்துள்ளார்கள். இவ்வளவும் செய்துவிட்ட அவர்களுக்கு, பிரதிவுபகாரம் தர நேரம் உதித்தால், நீ வழங்கப்போகும் பரிகாரம் என்ன?

இது உனது நேரம்”

அவதானங்களைச் சம்பாதித்தல்

“ஒருவனின் மிகப் பெறுமதியான அவதானத்தைச் சம்பாதிப்பது மிகக் கடினமான விடயம்”

தோற்றுப் போதல்

“நீங்கள் பங்களிக்கலாம் எனக் கனவு கண்ட போதும், அதனை செயல் படுத்துவதற்கான ஆளுமை உங்களிடம் தோன்றாமலிருப்பதே மிகப்பெரிய தோல்வியாகும்!”

இந்த நூலை, நீங்கள் நேரம் வாங்கி வாசியுங்கள்.

இந்த நூலில் கோபாலுவை கவர்ந்த ஒரு இடத்தை பகிர்ந்து கொள்ளுமாறு சொன்னான்.

கலையை உருவாக்குபவனின் ஆறு நாளாந்த கடன்கள்:

  1. தனிமையாக உட்காந்திருந்தல்; அமைதியாக உட்காந்திருத்தல்.
  2. எந்தவொரு அனுகூலத்திற்காகவும் அல்லாது ஒரு புதிய விடயத்தைக் கற்றுக் கொள்ளல்.
  3. தனிநபர்களிடம் கலை தொடர்பான ஆழமான கருத்துக்களை கேட்டறிதல்; சனத்திரள்      சொல்கின்ற விமர்சனங்களை கணக்கெடுக்காதிருத்தல்.
  4. மற்றக் கலை உருவாக்குபவர்களை ஊக்குவிக்க நேரமொதுக்குதல்.
  5. மாற்றங்கள் உருவாக வேண்டுமென்ற நோக்கோடு, கற்பித்துக் கொடுத்தல்.
  6. நீங்கள் உருவாக்கியதை வெளியாக்கி, உலகோடு பகிர்ந்து கொள்ளல்.

இனியென்ன தாமதம், உடனே சென்று கலை செய்வீர்!

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்ப்பத்தின் நான்காவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்