எண்ணம். வசந்தம். மாற்றம்.

அதிசய கூகிள் தொடர் – 02

முந்திய எனது பதிவாகிய அதிசய கூகிள் தொடர் இலக்கம் 01 இல் குறிப்பிட்டது போன்று கூகிள் தனது நிறுவனத்திற்கு ஆளுமைகளை எவ்வாறு சேர்த்துக் கொள்கின்றதென இந்தப் பதிவில் ஆராய்வோம். கூகிளின் மொத்த நடவடிக்கைகளிலும் புதுமை, விவேகம் என்பன காணப்படுவது தனது நிறுவனத்திற்கு மனித வளங்களைச் சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கையிலும் காணப்படாமலில்லை.

கீழுள்ள நிழற்படத்தினைப் பற்றி அறிவீர்களா? சற்று சிந்தியுங்கள்…

billboard_large.jpg

குறித்த நிழற்படத்தில் உள்ள விளம்பரப் பலகையில் காணப்படும் ஆங்கில எழுத்துக்கள் வருமாறு:

{first 10-digit prime found in consecutive digits of e}.com

இது கூகிள் நிறுவனத்திற்கு விவேகமான, திறமை வாய்ந்த கணினி பொறியியலாளர்களைச் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, கலிபோர்னியாவின் வீதியொன்றின் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகையாகும். இதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது…???

ஆராய்ச்சிக்கான கேள்வி. இந்த விளம்பரப் பலகையானது, கணிதப்புதிர் ஒன்றினையே ஆங்கிலத்தில் கொண்டுள்ளது. இங்கு e என்பதனால் சொல்லப்படுவது இயற்கை மடக்கையின் அடி எண்ணொன்றாகும். இந்த மடக்கை எண்ணின் பெறுமானம் 2.71828 ஆக அமையும். இந்த எழுத்தின் கணித நிலையை துல்லியமாக அறிந்திட இங்கே செல்லுங்கள். ஆக, இந்தப் புதிருக்கு மிகச் சரியான விடையைக் கண்டுபிடித்து அந்த இலக்கங்களை இணைய உலாவியில் இணைய முகவரியாக டைப் செய்ய, அது இந்தப் புதிரினை விடச் சங்கீரணமான கணிதப் புதிரினைக் கொண்ட இணையத் தளத்திற்கு அழைத்துச் செல்லுமாம். அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு மிகச் சரியான விடைகளை வழங்குபவர் கூகிள் எனும் புதுமைகளை செய்யும் நிறுவனத்தில் வேலைக்குச் சேரலாம். புதுமையான சிந்தனை.

அது சரி மேலுள்ள கணிதப் புதிருக்கு நீங்கள் விடையைக் கண்டுபிடித்து விட்டீர்களா? முயற்சி செய்யலாமே.. உங்களால் முடியாவிட்டாலும் இணையத்தில் தேடியாவது விடையைப் பெறலாமே…!

உலகத்திலுள்ள பலரும் இப்புதிரினை விடுவிக்க நிறைய பிரயர்த்தனங்களை மேற்கொண்டுள்ளார்கள் என்பதனை இந்த தளத்திற்கு செல்வதன் மூலம் நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

கூகிள் தனது நிறுவனத்திற்கு ஆட்களைச் சேர்ப்பதில் காட்டும் புதுமை அந்த நிறுவனத்தின் அத்தனை வருவிளைவுகள், நடவடிக்கைகள் என்பனவற்றிலும் காணப்படுகின்றன என்பதனை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

அடுத்த தொடரில் கூகிள் நிறுவனத்திற்குள்ளே எவ்வாறு அதன் ஊழியர்கள் வேலைகளைச் செய்கின்றார்கள் என்பதனைப் பற்றி ஆராய்வோம்..

தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களையும் மறுமொழியாக இடுங்கள்..

-உதய தாரகை

“அதிசய கூகிள் தொடர் – 02” அதற்கு 2 மறுமொழிகள்

  1. asnath Avatar
    asnath

    u r really great and better situation. thanks for the information.

  2. உதய தாரகை Avatar
    உதய தாரகை

    Thanks Asnath..

    Keep visiting to this Colour.

    Best smile,
    Uthaya Thaaragai

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்