இந்தப் பதிவு நிறத்தின் முக்கியமான புதியதொரு முன்னெடுப்பை சொல்வதற்காகவே பதிகிறேன். கடந்த வருடம் பரீட்சாத்தமாக நிறத்தின் சில பதிவுகளை ஒலிவடிவில் கொண்டுவரும் முயற்சியை உள்ளக ரீதியில் ஆரம்பித்தேன்.
பொதுவாக எந்தவொரு விடயமும் உள்ளக ரீதியில் பரீசிலிக்கப்பட்டாலும், உலகளவில் செல்லும் போதே அதற்கான சரியான மறுமொழிகள் கிடைக்கப்பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. இந்த விடயம் அண்மையில் கூகிள் நிறுவனம் வெளியிட்ட Google Buzz என்ற சேவையின் மூலம் தெளிவாக மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்பட்டது.
உள்ளக ரீதியில் ஆறு மாதங்களாக பரீட்சாத்தமாக பாவிக்கப்பட்ட Google Buzz ஆனது, உலகளவில் பாவனைக்கு வரும் போது, அதன் Privacy தொடர்பான விடயங்கள் பலரையும் உறுத்தத் தொடங்கியது. கூகிளும் முட்டி மோதிக் கொண்டு தொடர்ச்சியாக இற்றைப்படுத்தல்களையும் (Update) செய்து கொண்டு இருக்கிறது.
இன்று முதல் எனது நிறம் வலைப்பதிவின் தெரிவு செய்யப்பட்ட பதிவுகளை உங்களுடன் ஒலிவடிவில் பகிர்ந்து கொள்ள ஆர்வம் கொண்டுள்ளேன். வெறுமனே வசனங்களை வாசிக்காமல், வாசிக்கும் வசனங்களை உங்கள் மனக்கண் முன் கொண்டு வரவேண்டுமெனவும் எண்ணி பல விடயங்னள் ஒலிவடிவில் சேர்த்துமுள்ளேன்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் நான் எழுதிய மழைபெய்யும் நள்ளிரவில் நான் என்ற பதிவை ஒலிவடிவில் உங்களுடன் இந்தப்பதிவின் மூலமாக பகிர்ந்து கொள்கிறேன். ஒலிவடிவில் விடயங்களை பகிர்ந்து கொள்ளும் முறை இன்றளவில் அதிகளவில் பிரபல்யமாகியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இந்த எனது முயற்சியையும் நிறத்தின் Podcasting என்று கூட சொல்லிவிடலாம்.
உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகள், பின்னூட்டங்கள் என எல்லாவற்றையும் அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.
இதோ உங்கள் செவிகளுக்கு நிறம் ஒலிவடிவாக வருகிறது.
தலைப்பு: மழைபெய்யும் நள்ளிரவில் நான் | நேரம்: எட்டு நிமிடங்கள்
– உதய தாரகை
அன்புள்ள உதய தாரகைக்கு,
உங்கள் முயற்சிக்கும் அதன் வெற்றிக்கும் என் வாழ்த்துக்கள்.
நிறங்கள் எங்களை ஒலி அலைகளாக எங்களை அடைந்தது, அடைவது மிக்க மகிழ்ச்சி.
செந்தமிழ் நாடெனும் போதினிலே… இன்ப தேன் வந்து பாய்கிறது எங்கள் காதினிலெ…
வாங்க ஸ்ரீனிவாசன்.. நன்றி தங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும்.
நிறம் ஒலிவடிவம் கொண்ட நிலை தங்களை கவர்ந்ததையிட்டு மனமகிழ்ச்சி கொள்கிறேன். தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
உதய தாரகைக்கு முதலில் வாழ்த்துக்கள். உங்களது ஒலி வடிவான முயற்சி பிரமாதம். சொல்ல வருக்கின்ற விடயம் வாசிப்பைவிட கேட்கின்ற போது தான் அதிகளவில் மனதை தொட்டு உள்ளார்ந்த உணர்வுகளின் நரம்புகளுக்கு உதிரம் கொடுக்கும். நல்ல முயற்சி தொடரட்டும்.
வாங்க இல்யாஸ்.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள். அத்தோடு, இன்னும் பல பதிவுகள் ஒலிவடிவத்தில் வரவிருக்கின்றன.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை