எந்திரனும் என் முற்றத்து மல்லிகையும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 13 செக்கன்களும் தேவைப்படும்.)

அறிவியலின் அண்மைக்கால வளர்ச்சி வியக்கத்தக்கது. விஞ்ஞானம் பற்றிய எதிர்காலத்தின் அமைவை எதிர்கூறுமாய்ப் போல், புனைக் கதைகள் விஞ்ஞான புனைகதை எழுத்தாளர்களால் வெளியிடப்படுவதும், எதிர்வு கூறப்பட்டவை ஒரு கட்டத்தில் அப்படியே நடந்துவிடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த எதிர்வு கூறல்கள் பற்றிச் சொல்லும்  போது, மிக முக்கியமானவராக விஞ்ஞானி ஆதர் சி. கிளார்க்கை குறிப்பிடலாம். 1964 ஆம் ஆண்டில் அவர் எதிர்வு கூறியவற்றை நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இணையத்தின் வியாபிப்பு, அதிலே சமூக வலைப்பின்னல்களின் ஆதிக்கம் (பேஸ்புக், ட்விட்டர்) என்பனவெல்லாம் அவர் எதிர்வுகூறியது போலவே அப்படியே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

விஞ்ஞானப் புனைக்கதைகளின் இன்னுமொரு முக்கிய கதாபாத்திரமாகத் திகழுவது, மனிதனின் குணாதிசயங்களைக் கொண்ட ரோபோக்கள் ஆகும். இந்த வகை ரோபோ, Humanoid என்ற பெயர் கொண்டு ஆங்கிலத்தில் வழங்கப்படும். மனிதப்போலி என்று நல்ல தமிழில் சொல்லலாம். இவ்வாறு புனைக் கதைகளிலேயே வந்து கொண்டிருந்த மனிதப் போலிகள், பின்னாட்களில், நிஜத்திலேயே உருவாக்கப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

1990களில் மனித குணாதிசயங்களைக் கொண்ட மனிதப் போலிகள் உருவாக்கப்பட்டதோடு. 2003ஆம் ஆண்டளவில் மனிதனின் தோற்றத்தைக் கொண்ட மனிதப் போலிகளின் உருவாக்கம் நடந்தது. இந்தப் பெண்ணைக் கொஞ்சம் பாருங்கள். அவள் கன்னியல்ல, கணினி. dot.

துவித எண்களை (binary digit) பிரதிபலிப்பதாய் அமைந்த 01.10.10 என்று எழுதப்படக்கூடிய இன்றைய நாளில் உலகெங்கும் எந்திரன் திரையிடப்பட்டது. ஆனாலும், நேற்றைய தினமே அதன் முன்னோட்டக் காட்சியை எனக்கு பார்த்து விடுவதற்கான வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

எஃகை வார்த்து, சிலிகான் சேர்த்து, வயரூட்டி, உயிரூட்டி, ஹார்ட்டிஸ்கில் நினைவூட்டி, அழியாத உடலோடு, வடியாத உயிரோடு, ஆறாம் அறிவை அறைத்து ஊற்றி, ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி.. புதிய மனிதா, பூமிக்கு வா.. என்ற பாடலோடு விஞ்ஞான புனைக்கதை சொல்லும் எந்திரன் திரைப்படம் தொடங்கும்.

மனிதன் என்ற அற்புதமான உயிரினத்தின் அழகிய நிலைகளை அந்த உயிரினமே கண்டு கொள்வதில்லை. தன் சார்பான ஆளுமைகளை மனிதன் ரசிக்கவோ, தேர்ந்தெடுக்கவோ மறந்துவிடுகிறான். தனிநபரொருவனின் உணர்வுகளின் சேர்க்கை எப்படி பூமியில் அவன் சார்பான அடையாளத்தைக் கொண்டுவருகிறது என்பதை இன்னும் பல வரலாறுகள் சொல்லித்தந்து கொண்டுதான் இருக்கின்றன.

அறிவியலின் ஆதிக்கத்தால், தன்போன்றதொரு மனிதப்போலியை உருவாக்கும் “வசி” என்கின்ற விஞ்ஞானி, உலகின் கலைகள், மொழிகள் என எல்லாவற்றையும் மனிதப்போலிக்கு வழங்கி, இயந்திரத்தை உயர்திணையாக்கி விடுகிறார். சொல்லிக் கொடுக்கப்பட்ட, தெரிந்ததை மட்டும் சொல்லும் மனிதப்போலி, விஞ்ஞானியின் நோக்கத்திற்காக மனிதனின் உணர்வுகளை பெற்றுக் கொள்ளச் செய்யப்படுகிறது. பெற்றுக் கொள்கிறது. இடைவேளை. dot.

தொடரும் திரைப்படம், திரையில் பிரமாண்டத்தால் மிரட்டுகிறது. தமிழ் திரைப்படங்களில் என்றுமே காணாத அளவில் கணினி கிராபிக்ஸ் மற்றும் எக்ஸ்எப்எக்ஸ் நிலைகள் தோற்றமடையச் செய்யப்பட்டுள்ளன. தமிழ் நாட்டின் பாதைகளில் நூறு andro humanoid கள் நடமாடத் தொடங்கின்றன. துவம்சம் செய்கின்றன. இது ஏன்? எதற்கு? என்ன? என்ற கேள்விகள் எல்லாம் திரையில் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை விரியும் காட்சிகளில் அழகாக சொல்கிறார் சங்கர்.

ரஜனியின் படங்களை எனக்குப் பிடிக்கும். பாட்ஷா படத்தை பல தடைவைகள் பார்த்திருக்கிறேன். எந்திரனின் அத்தனை பிரேம்களிலும் அட்டகாசமாய் அசத்துகிறார். சிட்டி Version 2.0 ஆக, வரும் நிலை உச்சம். “கருப்பு ஆடு” தேடும் காட்சி மொத்த அசத்தல். முகபாவனை, சிரிப்பு என அத்தனை நிலையிலும் நான் தான் சூப்பர் ஸ்டார் என்பதை அப்படியே நிலைநிறுத்துகிறார்.

சனா – ஐம்பது கிலோ தாஜ் மஹால். dot.

ஏ. ஆர். ரஹ்மானின் இசையாலான பாடல்களில் எல்லாமே அற்புதம். அதில் கிளிமாஜ்சாரோ, காதல் அனுக்கள் என்பவை கவிதை. பாடல் காட்சிகளைப் படமாக்கியிருப்பது இன்னொரு கவிதை. பின்னணி இசையிலும், விஷேட ஒலியமைப்பிலும் திரையெங்கும் அப்படியே அழகிய அட்டகாசம் நடக்கிறது.

இந்த வகைக் கணினி நிலைக்காட்சிகளின் பிரமாண்டம் தமிழ் சினிமாவிற்குப் புதிது. ஆனால், அதனை அப்படியே அற்புதமாய் அமைத்திருப்பது வெற்றி.

“இதெல்லாம், ரொம்ப ஓவர். படத்தில ஒரு லொஜிக்கே இல்லையே, எப்படி அப்படியெல்லாம் நடக்கலாம்?” என்று படம் முடிந்து வந்த போது, ஒரு சிலர் கதைப்பது என் காதிற்குள் எட்டியது. கடந்த வருடம் வெளிவந்த 2012 என்ற ஆங்கிலத் திரைப்படத்தை அப்படியே புகழ்ந்து பேசியவர்கள், தமிழ் படத்தில் கணினியாலான பிரமாண்டங்கள் வரும் நிலையில் இப்படிச் சொல்வது மிக முக்கியமான மனித இயல்பாகும். அந்த இயல்பு ரசிக்கப்பட வேண்டியது.

நமது வீட்டின் முற்றத்தில் பூத்திருக்கும் மல்லிகை மணக்காது. நமது வீடு தவிர்ந்ததாய் எங்கெல்லாம் மல்லிகையுள்ளதோ அவை மட்டுமே மணக்கும். இதுவும் மனிதனுக்கே உரித்தான மிகப் பெறுமதியான குணம்.

மனிதனின் அழகிய குணங்கள் பலவும், ஒரு சில குணங்களினால், வெளிப்படாமலேயே போய்விடுவது மிகவும் கொடுமை. தன் சார்பான ஆளுமைகளை வளர்ப்பதை விட்டு விட்டு, இன்னொருவனின் ஆளுமைகளைப் பற்றிய பொறாமையால் தனக்கான பெறுமதியான நேரங்களை பலரும் இழந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

“உன்னை யாராவது வெறுக்கின்றான் என்றால், அவனால், உன்னைப் போல், ஆக முடியவில்லை என்பதே முதன்மைக் காரணம்.” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

சிந்திக்கத் தொடங்கினால், பிரச்சனைகளும் வரும், அத்தோடு பிரச்சனைக்கான தீர்வுகளும் வரும். “அறிவியல் என்பது நாம் அன்றாடம் சிந்திக்கும் விடயங்கள் பற்றிய மெருகேற்றப்பட்ட பதிப்பு” என்றே அல்பர்ட் ஐன்ஸ்டைன் குறிப்பிடுகிறார். மேலும், பிரச்சனைகளை உருவாக்கத் துணையான சிந்தனையால், ஒருபோதும் பிரச்சனைக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியாதென்றும் அவர் சொல்வார்.

சிந்திப்பது பிரச்சனை தராது. பிரச்சனை தர சிந்திப்பதே பிரச்சனையாகும். dot.

– உதய தாரகை

17 thoughts on “எந்திரனும் என் முற்றத்து மல்லிகையும்

  • @குந்தவை அக்கா..

   வாங்க அக்கா.. தங்கள் வருகைக்கும், புன்முறுவலுக்கும் நன்றிகள். 🙂 தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

  • வாங்க இர்பான் சார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   பதிவின் நீளம் ஒருபோதும், தொடர்ந்து வாசிப்பதைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்துவிடக்கூடாது என்பதை மையமாகக் கொண்டே, இந்த வாசிப்பதற்கான அண்ணளவான நேரத்தை பதிவின் ஆரம்பத்தில் சேர்க்கிறேன். இந்த நேரத்தை எப்படிக் கணிக்கிறேன் என்பதை பதிவொன்றில் சொல்லியிருந்தேன்.

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

  • வாங்க றம்ஸி, நீங்கள் இன்னும் எந்திரன் திரைப்படத்தை பார்க்கவில்லை என்பதை எப்படி சூட்சுமமாக சொல்லியிருக்கிறீர்கள். dot பற்றிய அறிமுகவும் அவசியமும் திரையில் விரியும் எந்திரனில் நீங்கள் காண்பீர்கள். பார்த்தவுடன் சொல்லியனுப்புங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

  • வாங்க சங்கீதா அக்கா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல. two dots இற்கு எந்திரனுக்கு முந்திய வரலாறு உண்டு என்பது பெருமையல்லவா? two dots..

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்..

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

 1. //“உன்னை யாராவது வெறுக்கின்றான் என்றால், அவனால், உன்னைப் போல், ஆக முடியவில்லை என்பதே முதன்மைக் காரணம்.” என்று கோபாலு சொல்லச் சொன்னான்….//

  அந்த கோபாலு சொன்னது என்னமோ உண்மைதான் பாருங்க.

  இந்த எந்திரனை உடன பார்த்துடனும்…. )
  என்னமோ dot. dot. என்கிறாங்க… 🙂

  • வாங்க சனுன். கோபாலு சொல்வது உண்மைதான். இந்த கோபாலு, ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறான் என்பதுதான் பலரும் மறைக்கின்ற உண்மை. கோபாலு சொல்வதை சிலபேர் உண்மை என்கிறார்கள். பலபேர் அவனை ரசிக்க மறந்து விடுகிறார்கள். கோபாலு இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான் ஒவ்வொருவருக்குள்ளும்.

   தொடர்ந்து நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

  • வாங்க வரதராஜன் அவர்களே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள். தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

 2. எந்திரன் திரைபடத்தை உங்கள் தொனியில் உரித்து அதன் அழகு பார்த்து எம் கண்களுக்கும் மிதக்க விட்டிருப்பது அழகு…..லாஜிக் இல்லையே என்று சொல்லும் நண்பர்கள் பற்றி பேசியதற்கு நன்றி .

  “விரல் விழுந்து விட்டால்
  அழுது கொண்டிருக்கக் கூடாது
  நகம் வெட்டும் நேரம்
  மிச்சம் என்று நினைத்து கொள்வோம் ”

  என்ற கவிஞர் வைரமுத்துவின் கவி வரிகள் நினைவுக்கு வருகிறது அந்த நண்பர்களுக்காய். நன்றி உதய தாரகை அவர்களே..

  பொத்துவிலூர் ஹமீத்

 3. வாங்க ஹமீத், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.

  கவிஞர் வைரமுத்துவின் அந்த வரிகள் மிக்க ஆழமானவை. வாழ்வு பற்றிய ஆக்கபூர்வமான பார்வைதான் வாழ்தலின் அத்திவாரம்.

  “நீ விரும்புவது போலவே வாழ்ந்துவிடு. மற்றவர்கள் இப்படித்தான் பார்க்க விரும்புகிறார்கள், அதுபோலவே நான் வாழ்வேன் என்றிருந்து விடாதே!” என்று நூலொன்றில் வாசித்திருக்கிறேன்.

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 4. ///// மனிதனின் அழகிய குணங்கள் பலவும், ஒரு சில குணங்களினால், வெளிப்படாமலேயே போய்விடுவது மிகவும் கொடுமை. தன் சார்பான ஆளுமைகளை வளர்ப்பதை விட்டு விட்டு, இன்னொருவனின் ஆளுமைகளைப் பற்றிய பொறாமையால் தனக்கான பெறுமதியான நேரங்களை பலரும் இழந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.///

  சரியான இன்னும் தரமான சிந்தனைகளின் தொகுப்புதான் நிறம் இன்னும் தொடரட்டும் சகோதரா,,,,,

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s