ஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி!!

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

எனக்கு பிடித்தமான ஆளுமைகளுள் ஸ்டீவ் ஜொப்ஸ் ஒருவர் என்பதை நான், நிறத்தில் ஏற்கனவே எழுதிய பசித்திரு, முட்டாளாயிரு மற்றும் ஒருநாள் சிரித்தேன், மறுநாள் வெறுத்தேன் என்ற பதிவுகள் மூலம் அறிந்து கொண்டிருப்பீர்கள். ஆளுமைகளை நமக்கு பிடித்துப்போவதற்கான முக்கிய காரணமாகச் சொல்லக்கூடியது, அவர்கள் கொண்டுள்ள வாழ்வின் மீதான பார்வை என்று சொல்லிவிடலாம்.

நீங்கள் அறிந்தது போன்றே, கடந்த புதன்கிழமை (2011.08.24), ஸ்டீவ் ஜொப்ஸ் தான், ஆப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று பணியாற்று அதிகாரி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக குறுகிய கடிதம் மூலம் அறிவித்திருந்தார். இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற உலகத்தின் பிரதிபலிப்பை இணையம் பூராக வெகு விரைவாக அவதானிக்க முடிந்தது.

பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களில் முதன்மைச் செய்திகளாக நண்பர்கள் தொடங்கி அகில உலகம் மட்டும் இதுவே பேச்சாகவிருந்தது. டிவிட்டரில் செல்தட தலைப்பாக (Trending topic) ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் ஆப்பிள் என்பன மாறியது ஆச்சரியமான விடயமல்ல.

இவ்வாறு உலகமே சொன்ன குறுகிய செய்திகளுக்குள் — ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் பொருள்கள் மீதான காதல் பற்றிய விடயங்கள் சொல்லப்பட்டாலும் ஆங்காங்கே, ஸ்டீவ்வை வெறுப்பவர்களினதும் செய்திகளையும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் கண்டு கொண்டேன்.

பங்குச்சந்தையில் ஆப்பிளின் பங்குகளில் வீழ்ச்சி ஏற்படலாம், மக்கள் ஆப்பிளின் பொருள்களை இனி வாங்க விரும்பமாட்டார்கள் போன்ற அனுமானங்களும் ஆரவாரிப்புகளோடு தமது இருப்பை இந்த செய்திகளுக்குள் தக்கவைத்துக் கொண்டன.

எது எப்படியோ, எனக்கு ஸ்டீவ் ஜொப்ஸ் பிடித்துப் போனதற்கு நிறையக் காரணங்கள் உண்டு. வெறும் இலத்திரனியல் சாதனங்களை உருவாக்கும் நிறுவனத்தின் அதிபராக மட்டும் ஸ்டீவ் இருக்கவில்லை. வாழ்க்கையில் இருந்து கொண்டிருக்காமல், வாழ்ந்து கொண்டிருந்தவர் என்ற பெரிய அழகான சாதனை அவரிடம் இருந்தது. அவரின் வாழ்வின் மீதான பார்வை, ஆனந்தமான உத்வேகங்களைக் கொண்டு தந்திருக்கிறது. இதற்கு நிறைய தருணங்களில் அவர் பகிர்ந்து கொண்ட விடயங்கள் எடுத்துக்காட்டாக அமையும்.

வெறுமனே செய்திகளைச் சொல்லாமல், செய்திகளால் உத்வேகம் தரக்கூடிய பாணி, ஸ்டீவ்விற்கு கைவந்த கலை.

2006இல், NBC செய்தியின் போது, ஸ்டீவ் ஜொப்ஸ் கூறிய விடயம், அழகிய கவிதை.

“நீங்கள் செய்யுமொரு விடயம் மிகவும் உன்னதமாக நடந்தேறுகிறதென்றால், அதன் பின்னர் அதிலேயே அதிக நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்காமல், இன்னொரு புதிய விடயமொன்றை நீங்கள் உன்னதமாகச் செய்யத் தொடங்க வேண்டும். அடுத்தது என்ன என்பதை ஆய்ந்தறியுங்கள்.”

Icon Ambulance

ஸ்டீவ் ஜொப்ஸின் ராஜினாமா பற்றிய செய்தியை அறிந்து கொண்ட, Google+ இன் செயற்றிட்ட முகாமையாளர் விக் கன்டோட்ரா, தனக்கு ஸ்டீவ்வுடன் 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அழகிய அனுபவமொன்றை பகிர்ந்து கொண்டார். ஞாயிற்றுக்கிழமையாயிருந்த போதும், ஒரு செய்நிரலின் Icon இல் காணப்படுகின்ற வர்ணத்தோடான நிழல் பற்றிய நுணுக்கமான விடயத்தைக்கூட அழகுற மாற்றியமைத்திட வேண்டுமென்ற அவரின் ஆர்வம் தலைமைத்துவத்தின் பண்புகளுக்கு முத்தாய்ப்பாய் அமைந்துவிடுகிறது.

இங்குதான் ஸ்டீவ் ஜொப்ஸ், மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார். ஒரு தனி ஆளுமைக்காகவே பலரும், ஆப்பிள் நிறுவனத்தின் பொருள்களில் மோகம் கொண்ட உண்மையும் வரலாறு கண்டதுதான்.

இந்த ட்வீட், ஸ்டீவ் ஜொப்ஸின் செல்வாக்கை சொல்லும்:

http://twitter.com/#!/darrenrovell/status/106700579413311488

மாற்றி யோசி!

Think different என்பதுதான் ஆப்பிளின் தாரக மந்திரம். அந்த மந்திரத்தைச் சொல்வதாய் ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தொலைக்காட்சி விளம்பரமொன்றுள்ளது.

அந்த விளம்பரத்தில் சொல்லப்படுகின்ற வார்த்தைகள் யாவும் ஆழமான அர்த்தம் கொண்டவை.

“மாற்றி யோசிப்பவர்களை எப்போதும், கிறுக்குத்தனம் பிடித்தவர்களாகவே சமூகம் பார்க்கிறது. ஆனால், உலகத்தை மாற்ற வேண்டுமென்ற கிறுக்குத்தனமான எண்ணம் கொண்டவர்களை நாம் மேதைகளாகவே பார்க்கிறோம்.”

அறியாத பதினைந்து விடயங்கள்

ஸ்டீவ் ஜொப்ஸை அதிகமானோர் அறிந்து வைத்திருந்திருந்தாலும், அவர் பற்றிய அரிய பதினைந்து விடயங்களை அழகிய infographics ஆக, Ellie Koning வடிவமைத்திருந்ததை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். உலகில் வருடாந்த மொத்தச் சம்பளமாக வெறும் ஒரு டொலரை மாத்திரமே ஸ்டீவ் ஜொப்ஸ் பெற்றார் என்பது அதிசயமான தகவல்தான்.

குறித்த infographics உங்களின் பார்வைக்கு இதோ: இணைப்பு (நிழற்பட மூலம்: ஃபிளிக்கர்):

ஸ்டீவ் ஜொப்ஸின் ராஜினாமா பற்றிய நிகழ்வையொட்டி இணையத்தில் வெளியான சில நகைச்சுவையான ட்வீட்களும் கவனத்தை ஈர்த்தன. அதில் ப்ளாக்பேரி மற்றும் HP இன் webOS கையடக்கத் தொலைபேசிகளுக்கு பெரும் சவாலாக iPhone உருவானதைச் சொல்லுமாய்ப் போல் அமைந்த ட்வீட் சுவாரஸ்யமானது. போலி ஸ்டீவ் ஜொப்ஸ் ட்வீட்டிய அந்த ட்வீட் உங்களின் பார்வைக்கு.

http://twitter.com/#!/falseSteveJobs/status/106559181988966400

– உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s