இரண்டாவது ஆண்டில் உங்கள் நிறம்

வணங்கத் தலையும் வழங்க மொழியும் தந்த வல்லோனைப் போற்றுகின்றேன். இது நான் பாடசாலை நாட்களில் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது, சபையை விளிக்கப் பயன்படுத்திய வரிகள் தாம். இப்பதிவிற்கும் இவ்வசனமே முதல் வசனமான அமைதல் பொருத்தமானதாக இருக்கும் என நம்பினேன். அது இப்பதிவின் முதல் வசனமாயிற்று.

கடந்த வாரம் பூராக நிறம் வலைப்பதிவில் “என்னவென்று சொல்வது?” என்ற தலைப்புடன் இத்தனை நாட்களில் சொல்கிறேன் என சிறிய அறிவிப்பொன்றை நீங்கள் கண்டிருக்கக்கூடும். அந்த அறிவிப்பில் மறைந்திருந்த விடயத்தை இப்பதிவின் தலைப்பைக் கண்டவுடனே நீங்கள் புரிந்திருப்பீர்கள்.

splash1.gif

நீங்கள் நேசிக்கும் நிறம் தனது வலையுலக இருப்பில் வெற்றிகளுடன் கூடிய ஓராண்டை இன்றோடு நிறைவு செய்கின்றது. கடந்த ஓராண்டில் உங்கள் சிந்தைக்குச் செழிப்பாக மற்றும் விருந்தாக என்னால் பல விடயங்களை உங்களுக்காக படைக்க முடிந்ததென நம்புகின்றேன். கடந்த ஓராண்டில் இவ்வலைப்பதிவைக் கண்டு களித்து அதிலுள்ள விடயங்கள் தொடர்பாகவும், அதன் வடிவமைப்பு தொடர்பாகவும் தங்கள் உயிர்ப்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய நிறத்தின் வாசகர்களுக்கு நிறம் தனது மனமார்ந்த நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றது.

2006 ஆம் செப்டம்பர் 18ஆம் திகதி, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பதினெட்டு வழிகள் என்ற தலைப்பில் இட்ட பதிவின் மூலம் நிறம் உங்களை சந்தித்தது உங்களுக்கு நினைவிருக்கக் கூடும். கடந்து வந்த ஓராண்டில் நிறம் என்னவெல்லாம் செய்தது என்பதை திரும்பிப் பார்க்கும் உஷிதமான தருணம் இதுவாகும் என நான் திடமாக நம்புகிறேன்.

நாம் காணும் உலகம் எவ்வாறு இருக்கிறது? நாம் அறிந்தும் அறியாமலும் இருக்கின்ற விடங்கள் என அனைத்தையும் வித்தியாசமான கோணங்களில் ஆய்ந்தறிந்து உங்களை அடையச் செய்வதே நிறத்தின் தெவிட்டாத முயற்சி. அது இறைவனின் துணையுடனும் உங்களின் ஆதரவுடனும் என்றும் தொடரும் என நான் குறிப்பிட விரும்புகிறேன்.

கடந்த மாதம் நிறம் வலைப்பதிவில் நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம் எனும் தலைப்பில் எனது ஊரில் இடம்பெற்ற அதிசய நிகழ்வொன்று பற்றி நானொரு பதிவிட்டிருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்தப் பதிவானது ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி, இலங்கையில் இருந்து வெளியாகும் “மெட்ரோ நியூஸ்” எனும் தேசிய தமிழ்ப் பத்திரிகையில் பிரசுரமாயிருந்தது என்னை அதிசயத்தில் ஆழ்த்தியது. அதிசயத்தை எனது வலைப்பதிவில் இருந்து பெற்றுக் கொண்டு அதனை தமது பத்திரிகையில் பிரசுரித்து இன்ப அதிர்ச்சியைத் தந்த “மெட்ரோ நியூஸ்” பத்திரிகைக்கு எனது நன்றிகளைத் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். பத்திரிகையில் வெளியான செய்தியை Scan செய்து இங்கே தருகின்றேன். வெளியாகிய பத்திரிகைச் செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நீங்கள் எனது ஆக்கங்களை பார்ப்பதனால் பெற்றுக் கொண்ட மகிழ்ச்சி என்றுமே நிறத்தின் பலமாக அமையும். நீங்கள் நிறத்தின் உள்ளடக்கங்கள் பற்றி சொல்லிய கருத்துக்கள் என்றுமே உங்களை நிறத்துடன் இணைக்கும் பாலமாக அமைந்திருக்கும்.

கடல் கடந்த தேசங்களிலிருந்தெல்லாம் எனது வலைப்பதிவின் உள்ளடக்கங்களைப் பற்றி வலைப்பதிவூடாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் தமது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் கூறிய அன்பு நண்பர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த ஓராண்டில் பல பதிவுகளை உங்களுடன் நிறத்தினூடாகப் பகிர்ந்து கொண்டுள்ளேன். இந்தப் பதிவுகளில் நீங்கள் அதிகம் நேசித்த பதிவுகளில் அதிக பிரபல்யமான பத்துப் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகிறேன். இந்தப் பதிவுகளை தரப்படுத்துகையில் WordPress மூலம் தரப்படும் ஒவ்வொரு பதிவிற்குமாக வருகை தந்தவர்களின் எண்ணிக்கையை குறித்துக் காட்டும் புள்ளிவிபரமே அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.

இதோ முதல் பத்து பதிவுகள். இதைத்தான் Top 10 என்றும் சொல்வார்களாக்கும்.

சத்தியமா இது “சிவாஜி” திரைப்படம் பற்றிய பதிவல்ல என்று மட்டுந்தான் சொல்ல முடியும்.

உன் சமையலறையில் முட்டைக் குழம்பா? ஆம்லட்டா? – சமையல் குறிப்பு எதுவும் எனக்கு எழுதத் தெரியாது. அப்போ அடுப்படி அட்வைஸ் என்று நினைக்கிறீர்களா?

சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸட்;ரோங்கா? சத்தியமா நான் இல்லை என்று நீங்கள் சொல்வது போல் தோன்றுகிறது. சந்திரனையையே தொட்டுவிட்ட சாதனைகளில் கும்பம்.

என்னாது சின்னப்புள்ளத் தனமா இருக்கே… 100 பேரா..??? 100 ஆயிரம் என்பதில் ஆயிரத்தை விழுங்கி விட்டீங்களா என்று கேட்காதீர்கள்.

நிச்சயமா உங்களுக்குச் சொல்லவில்லை. நீங்க என்னைப் பார்த்து சொல்ற மாதிரி இருக்கு.. அப்படியா?

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!! இப்டி கேட்டுப்புட்டீங்களே!! அப்டின்னு சொல்றீங்களா?

கால் கிலோ ஆர்வம்… கால் கிலோ ஈடுபாடு… அரைக்கிலோ ஆசை எல்லாமே சேர்த்தால் முக்கால் இறாத்தல் Success என்று சொல்லலாமா? என்ன விலை என்று நீங்க கேட்பீங்களாக்கும்.

இவரு அதிசயம் அதிசயமா சொல்றாரு.. எங்கள வச்சி நீங்க காமடி கீமடி பண்ணலையே என்று மட்டும் கேட்காதீங்க..

என்னா நைனா தெளிவா கொழப்புறாய்… யப்பா நாங்க நன்னா இருக்கிது உனக்கு புடிக்கலையா?

நீங்க நெனக்கிற மாதிரியான சொறி இல்லைங்க.. அப்போ சாறியா? ஆமா, சாறி என்டா புடைவை தானே!

இப்படியாக உங்கள் ஆதரவைப் பெற்ற பதிவுகள் காணப்படுகின்றன. இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிறம், தொடர்ந்தும் நல்ல பல விடயங்களை உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள திடசல்கல்பம் பூண்டுள்ளது.

தொடர்ந்தும் நீங்கள் நிறத்துடன் இணைந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையும், உங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கேட்க வேண்டுமென்ற ஆர்வமும் என்றுமே நிறத்திற்கு உண்டு. தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

பல புத்தம் புதிய விடயங்கள் நிறத்தில் தொடர்ச்சியாக விரியும்.

எல்லோரும் கொண்டாடுவோம்!!

-உதய தாரகை

5 thoughts on “இரண்டாவது ஆண்டில் உங்கள் நிறம்

 1. HAPPY BIRTHDAY TO ‘NIRAM’

  இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நிறத்திற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

  இதுவரை நிறத்தில் கண்டுகளித்த அனைத்து அம்சங்களும் அருமையானவை. ஆச்சரியத்திற்குரியவை!

  சிந்தனைக்கு விருந்தாகும் எண்ணங்களை சுவையாக, சுவாரஸ்யமாக தந்ததோடு மட்டுமல்லாமல், பக்க வடிவமைப்புகளிலும் உங்களது கைவண்ணத்தைக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.

  உங்களது இந்த முயற்சி, தேடல் மென்மேலும் உயர வேண்டுமென்றும், இது போன்று பல ஆண்டுகளை வெற்றியுடன் கடக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

  வாழ்த்துக்கள்!!!

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s